Home Video “தீபாவளிக்கு பூ கோர்க்கும் நஜிப்”

“தீபாவளிக்கு பூ கோர்க்கும் நஜிப்”

1053
0
SHARE
Ad

najib-flower-deepavali-2017கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு வழங்கியிருக்கும் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம் என்றும் நவீனமயமான பல வசதிகளை இன்று நாம் கொண்டிருந்தாலும் நாம் நமது கலாச்சாரத்தை நாம் தொடர்ந்து பேணிக்காத்து வருகிறோம் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.

“இந்த ஆண்டு கொண்டாடப்படும் தீபாவளி மலேசியாவின் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், அமைதியையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்த ஆண்டுக்கான தீபாவளி மற்றொரு சிறப்பு அம்சத்தையும் கொண்டிருக்கிறது. மலேசிய இந்தியர்களின் நலனுக்காக மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் என்ற பெருவியூகத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தீபாவளியின்போது ஏற்றப்படும் தீபம் பாய்ச்சும் ஒளி வெள்ளம்போல் இந்திய சமுதாயத்திலும் இந்தியர்களின் வாழ்க்கையிலும் சாதகமான நன்மைகளைக் கொண்டு வந்து வெளிச்சம் ஏற்றுவோம் என இந்த தீபாவளியின்போது உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் நஜிப் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

நஜிப்பின் கவரும் காணொளி

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஒரு சிறப்பு காணொளியையும் (வீடியோ) பிரதமர் வெளியிட்டிருக்கிறார்.

இந்தியர்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொள்வது போலவும், அவர்களோடு இணைந்து பூ கோர்க்கும் பணிகளில் ஈடுபடுவது போலவும் அந்தக் காணொளி அமைந்திருக்கிறது.

இந்தியர்களுடன் நஜிப் அணுக்கமாக இருப்பதைப் போல் காட்டும் இந்த காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-

deepavali-astro-banner