Home வணிகம்/தொழில் நுட்பம் புதிய மாஸ் முதன்மை அதிகாரிக்கு பீட்டர் பெல்லியூ வாழ்த்து

புதிய மாஸ் முதன்மை அதிகாரிக்கு பீட்டர் பெல்லியூ வாழ்த்து

1083
0
SHARE
Ad

Izham - Ismail - mas - ceoகோலாலம்பூர் – மாஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பதவி வகித்து வந்த பீட்டர் பெல்லியூ பதவி விலகுவதாக அறிவித்திருக்கும் வேளையில் அவருக்குப் பதிலாக, மாஸ் நிறுவனத்தின் புதிய முதன்மைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் பதவி நியமனம் பெற்றிருக்கிறார் கேப்டன் இசாம் இஸ்மாயில்.

இதற்கிடையில் பதவி விலகிச் செல்லும், பீட்டர் பெல்லியூ, புதிய அதிகாரியான இசாம் இஸ்மாயில் மீது தனது நம்பிக்கையைப் புலப்படுத்தியிருக்கிறார்.

இசாம் ஒரு சிறந்த மனிதர் என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருக்கும் பீட்டர் தொடர்ந்து இந்த சிறப்பான விமான நிறுவனத்தை வழிநடத்த சிறந்த தலைவர் கிடைத்திருக்கிறார் என்றும் இசாம் குறித்து தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.