Home கலை உலகம் ‘சாமி 2’ படத்திலிருந்து திரிஷா திடீர் விலகல்!

‘சாமி 2’ படத்திலிருந்து திரிஷா திடீர் விலகல்!

1422
0
SHARE
Ad

trisha-19-12சென்னை -விக்ரம், திரிஷா நடிப்பில், கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சாமி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை, ஹரி தற்போது விக்ரமை வைத்தே இயக்கி வருகின்றார்.

இத்திரைப்படத்தில், திரிஷா, கீர்த்தி சுரேஸ், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நடிகை திரிஷா தான் ‘சாமி 2’ திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“படைப்பு வித்தியாசம் காரணமாக நான் சாமி 2 திரைப்படத்தில் இருந்து விலகுகிறேன். அப்படக்குழு வெற்றியடைய வாழ்த்துகள்” என்று திரிஷா தனது டுவிட்டரில் நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.