கோலாலம்பூர் – தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு மலேசியாவில் முக்கிய நகரங்களில் கடும் வெயில் நிலவி வந்தது.
இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் வெயிலும் இன்னும் அதிகமாகப் போவதாக தகவல் ஒன்று பரவியது.
அதனை மலேசிய வானிலை ஆய்வு மையம் மறுத்திருக்கிறது.
மலேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் அலுய் பஹாரி கூறுகையில், “கடந்த வாரம் அதிக பட்ச வெப்ப நிலையாக 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. எனினும் நாம் 37 டிகிரி செல்சியசை அடையவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
லான் புயலின் தாக்கம் காரணமாக நேற்று திங்கட்கிழமை தீபகற்ப மலேசியாவிலும் சில இடங்களில் கடுமையான காற்று வீசியதாகவும், மதியம் அது இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாகவும் அலுய் பஹாரி குறிப்பிட்டிருக்கிறார்.