Home இந்தியா ஆன்மீக நாட்டமில்லாதது தான் தற்கொலைக்குக் காரணம்: எச்.ராஜா

ஆன்மீக நாட்டமில்லாதது தான் தற்கொலைக்குக் காரணம்: எச்.ராஜா

898
0
SHARE
Ad

H.Rajaசென்னை – கந்துவட்டி நெருக்கடி காரணமாக, நெல்லையில் நேற்று திங்கட்கிழமை, கணவன், மனைவி, இரு குழந்தைகள் என ஒரு குடும்பமே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழகத்தில் ஆன்மீகத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்குக் குறைந்திருப்பது தான் இது போன்ற தற்கொலைச் சம்பவங்களுக்குக் காரணம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தமிழகத்தில் பகுத்தறிவு என்று கூறி ஈ.வே.ரா ஆட்கள் மக்களைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றும் எச்.ராஜா குறிப்பிட்டிருக்கிறார்.