Home கலை உலகம் விஜய் 5 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது உறுதியானது!

விஜய் 5 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது உறுதியானது!

944
0
SHARE
Ad

actor-vijayசென்னை – கடந்த 2015-ம் ஆண்டு, ‘புலி’ படத்தில் நடித்த நடிகர் விஜய், அத்திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் 5 கோடி ரூபாயைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்நிலையில், அதனை ஏற்றுக் கொண்ட விஜய், வருமான வரியைக் கட்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதனிடையே, வரி ஏய்ப்பு செய்ததற்காக வட்டியோடு கூடுதல் வரி செலுத்திய ஒருவர், மீண்டும் அதே போன்ற தவறை மீண்டும் ஒருமுறை செய்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.