Home கலை உலகம் பிப்ரவரி 1ஆம் தேதி ‘கடல்’ திரைப்படம் வெளியீடு

பிப்ரவரி 1ஆம் தேதி ‘கடல்’ திரைப்படம் வெளியீடு

880
0
SHARE
Ad

சென்னை,ஜன.17 – மறைத்து மறைத்து வைத்திருந்த தனது ‘கடல்’ படத்தின் ஹீரோ, ஹீரோயினை முதலில் ஆந்திரா மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த மணிரத்னம் (படம்), இரண்டாவதாக தமிழக ஊடகங்களுக்கு  அறிமுகம் செய்தார்.

மணிரத்னம் தனது கடல் படக்குழுவினரை குறிப்பாக ஹீரோ கௌதம், ஹீரோயின் துளசியை தமிழக ஊடகங்களின் கண்ணில் காண்பிக்கவே இல்லை. ஆனால் அவர்களை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஊடகங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ராணி சீதை ஹாலில் கடல் படக்குழுவினர் தமிழக  ஊடகங்களை சமீபத்தில் சந்தித்தனர். வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக், அர்ஜுன், அரவிந்த் சாமி, கௌதம் கார்த்திக், துளசி, லக்ஷ்மி மஞ்சு உள்ளிட்டோர்  ஊடகங்களை சந்தித்தனர்.

#TamilSchoolmychoice

ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் படக்குழுவினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மணிரத்னம், அருமையான இசையமைத்துக் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டி, நன்றி தெரிவித்தார். பதிலுக்கு ரஹ்மான் மணிரத்னம் தான் என்னுடைய குரு என்று புகழ்ந்தார்.

‘கடல்’ படம் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.