கோலாலம்பூர், மார்ச் 26- 22 ஆண்டுக் காலமாக பிரதமர் பதவியை வகித்த துன் மகாதீர் பொதுத்தேர்தலுக்கு பின் தலைமைத்துவத்தில் அம்னோவிலும், தேசிய முன்னணியிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கோடி காட்டியுள்ளார்.
பிரதமர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அவர் தலைமைத்துவ மாற்றத்தை எதிர் நோக்க வேண்டியிருக்கலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஏமாற்றங்களும் எதிர்ப்புகளும் நிறைந்தது தான் அரசியல். அது இயல்பானது என்று கூறும் துன் மகாதீருக்கு அம்னோவில் இன்னும் ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும், தற்போது நாட்டில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு கூடி வருவதால் மகாதீர் தமது பாரமரியத்தை பாதுக்காக்க விரும்புகிறார்.
வரும் ஜூன் மாதத்திற்குள் 13ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தேசிய முன்னணி சிறுபான்மை வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரதமர் நஜிப்பின் தாராள மயமான நடவடிக்கைகள் குறித்தும் துன் மகாதீர் விமர்சனம் செய்துள்ளார்.