Home நாடு தமிழில் தீபாவளி வாழ்த்துகளுடன் உரையைத் தொடங்கினார் நஜிப்!

தமிழில் தீபாவளி வாழ்த்துகளுடன் உரையைத் தொடங்கினார் நஜிப்!

911
0
SHARE
Ad
najib-budget2018-finance minsitry staff
2018-ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவுத் திட்டத்திற்கு இறுதி வடிவம் தர இரவு பகல் பாராமல் உழைத்த நிதி அமைச்சின் பணியாளர்களுக்கு, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட நஜிப், இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

கோலாலம்பூர் – (பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துத் தனது உரையைத் தொடங்கிய பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், உரையைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே “இது தீபாவளி தருணமாக இருப்பதால், அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக நஜிப் கூறினார்.

பின்னர் தமிழிலேயே ‘தீபாவளி வாழ்த்துகள்’ என கூறிய பிரதமர் தனது வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்தார்.

najib-presenting-budget-2018நீல நிற ‘பாஜூ மலாயு’ எனப்படும் மலாய் உடையில் நாடாளுமன்றம் வந்த நஜிப், தற்போது நாடாளுமன்றத்தில் தனது உரையைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.