Home நாடு குவான் எங் – அஸ்மின் சீனா சென்றதும் நாட்டை விற்கவா? பிரதமர் கேள்வி!

குவான் எங் – அஸ்மின் சீனா சென்றதும் நாட்டை விற்கவா? பிரதமர் கேள்வி!

708
0
SHARE
Ad

Budget2018-03கோலாலம்பூர் – இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தனது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றத் தொடங்கிய பிரதமர் நஜிப், எதிர்க்கட்சித் தலைவர்களான சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆகிய இருவரையும் தொடக்கத்திலேயே சாடினார்.

முதலீடுகள் குறித்து பேசிய பிரதமர், சீனாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன அதிபருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட வேளையில், “பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி ஆகியோரும் தங்களின் மாநிலங்களுக்கு முதலீடுகளைக் கவர சீனா சென்றுள்ளார்கள். அவர்களின் மொழியில் சொல்வதானால், அவர்களும் சீனாவுக்கு நமது நாட்டை விற்கத்தான் சென்றார்களா?” என நஜிப் தனது உரையில் கேள்வி எழுப்பினார்.