Home கலை உலகம் இளம் இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இளம் இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

1183
0
SHARE
Ad

Kannan Rangasamyசென்னை – கடந்த மார்ச் மாதம் வெளியான ‘தாயம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய கண்ணன் ரங்கசாமி (வயது 29) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

என்றாலும், அவருக்குத் தொடர்ந்து இருதயப் பிரச்சினை இருந்து வந்த நிலையில், பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த 40 நாட்களாகச் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், நேற்று திடீரென மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.