Home நாடு ஹராப்பானின் பதிவை சங்கப்பதிவிலாகா இன்னும் அங்கீகரிக்கவில்லை!

ஹராப்பானின் பதிவை சங்கப்பதிவிலாகா இன்னும் அங்கீகரிக்கவில்லை!

806
0
SHARE
Ad

pakatan harapan-logoகோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பானின் அதிகாரப்பூர்வக் கூட்டணியை இன்னும் அங்கீகரிக்காத சங்கப்பதிவிலாகா அது குறித்து ஆய்வு செய்து வருவதாக உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் இது குறித்து பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் டிஸ் டிசின் உள்துறை அமைச்சருக்குக் கேள்வி எழுப்பினார்.

ஹராப்பான் கட்சியின் பதிவு மற்றும் சின்னத்தை இன்னும் அங்கீகரிக்காத சங்கப்பதிவிலாகா, அதனை அங்கீகரிக்க கூடுதலான அளவுகோல்களைக் கேட்டிருப்பது ஏன்? என்று சிம் டிஸ் டிசின் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

அதற்கு எழுத்துப்பூர்வப் பதிலளித்த உள்துறை அமைச்சர், எந்த ஒரு அரசியல் கட்சியின் பதிவையும் சங்கப்பதிவிலாகா தீவிரமாக ஆய்வு செய்த பிறகே அங்கீகரிக்கும். மக்களின் பாதுகாப்பு மற்றும் பொது நலன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அது செய்யப்படுகின்றது. அதுமட்டுமின்றி சங்கப்பதிவிலாகா, அந்த விண்ணப்பத்திற்கு எந்த ஒரு கூடுதல் அளவுகோலையும் விதிக்கவில்லை. அது இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்திருக்கிறார்.