Home உலகம் மலேசிய போதகர் உட்பட இருவருக்கு சிங்கப்பூர் அரசு தடை!

மலேசிய போதகர் உட்பட இருவருக்கு சிங்கப்பூர் அரசு தடை!

1920
0
SHARE
Ad

malaysianpreacherbaninsingaporeசிங்கப்பூர் – இஸ்லாம் கருப்பொருளுடன் கூடிய கப்பல் ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூர் செல்ல முயற்சி செய்த மலேசிய போதகர் மற்றும் ஜிம்பாவே நாட்டைச் சேர்ந்த போதகருக்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்திருக்கிறது.

ஜிம்பாவே நாட்டைச் சேர்ந்த இஸ்மாயில் மென்க் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ஹாஸ்லின் பஹாரிம் என்ற ‘உஸ்தாஜ் பாலிவுட்’ (பாடுவதை வைத்து அவ்வாறு அழைக்கப்படுகின்றார்) ஆகிய இருவரின் விண்ணப்பத்தையும், சிங்கப்பூர் இஸ்லாமிய சமயக் கவுன்சில், சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் மற்றும் சிங்கப்பூர் துறைமுக அதிகார மையம் ஆகியவற்றிடம் கலந்தாலோசித்து சிங்கப்பூர் உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சு (எம்எச்ஏ) நிராகரித்துவிட்டதாக ‘தி ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

“இஸ்மாயில் மென்க் மற்றும் ஹாஸ்லின் பஹாரிம் ஆகிய இருவரும் ஏற்கனவே சிங்கப்பூரில் போதனை செய்வதற்கான சிறப்பு பணி அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தனர்.”

#TamilSchoolmychoice

“ஆனால் சிங்கப்பூரில் இருந்து இயங்கும் கப்பல்களில் மத போதனை செய்ய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்று எம்எச்ஏ தெரிவித்திருக்கிறது.

அவர்களின் போதனைகள், சிங்கப்பூர் முஸ்லீம்கள் பின்பற்றி வரும் முற்போக்கான மற்றும் செழித்தோங்கும் மத வாழ்க்கைக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய மதிப்பீடுகளை கெடுக்கக்கூடிய வகையில் இருப்பதால் நாங்கள் அவர்களை ஆதரிக்கவில்லை என சிங்கப்பூர் இஸ்லாமிய சமயக் கவுன்சிலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.