கோலாலம்பூர் – இந்தியாவால் பணமோசடி மற்றும் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளின் படி தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் தங்கி வருகின்றார்.
அவருக்கு மலேசிய அரசு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கியிருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவால் தேடப்பட்டு வரும் ஜாகிர் நாயக்கை ஏன் மலேசிய அதிகாரிகள் கைது செய்யவில்லை? என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மலேசிய அரசு, “ஜாகிர் நாயக்கை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவர் மலேசிய சட்டங்கள் எதையும் மீறவில்லை.”
“அதுமட்டுமின்றி, ஜாகிர் நாயக் மீதான தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்திய அரசு, மலேசிய அரசுக்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வ கோரிக்கையையும் வைக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறது.