Home நாடு ‘யாழ் நூலகங்களுக்கு 1 இலட்சம் நூல்கள்’ – மலேசியாவில் செங்கோட்டையன் அறிவிப்பு!

‘யாழ் நூலகங்களுக்கு 1 இலட்சம் நூல்கள்’ – மலேசியாவில் செங்கோட்டையன் அறிவிப்பு!

1020
0
SHARE
Ad

Sengottaiyanகோலாலம்பூர் – தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகத்தின் தமிழக பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் செங்கோட்டையன் உரையாற்றுகையில், யாழ்பாணத்தின் நூலகங்களுக்கு 1 இலட்சம் நூல்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.