Home நாடு தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் 2017!

தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் 2017!

2325
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மலேசியத் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன், தமிழகத்தின் தமிழக பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

NTTTA2இவ்விழாவில் விருது பெற்றவர்களின் முழுப்பட்டியல் பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

பிரிவு 1:

பாலர் பள்ளி ஆசிரியர் திலகம் விருது:

  1. ஜெயப்பிரியா கன்னியப்பன் (சிதம்பரம் பிள்ளை தெலுக் இந்தான் தமிழ்ப் பள்ளி பேராக்)
  2. அழகுமதி பெருமாள் (துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி பாஜம், நெகிரி செம்பிலான்)
  3. மாரியம்மாள் முனியாண்டி (ஜாலான் ஜெயா தமிழ்ப்பள்ளி, ஜோகூர் பாரு)

தேசியப் பள்ளி ஆசிரியர் திலகம் விருது:

  1. ஷர்மிளா சாந்தி ராஜேந்திரன் (தாமான் சினாங்கான் தேசியப் பள்ளி, பினாங்கு)
  2. பிரேமா இராமமூர்த்தி (தாமான் துன் அமினா 2 தேசியப்பள்ளி, ஜோகூர்பாரு)
  3. குமருகுரு குப்புசாமி (பண்டார் பாரு சுங்கை லாடாங் தேசியப்பள்ளி)

தமிழ்ப்பள்ளி ஆசிரியர் திலகம் விருது:

  1. சாந்தி அருள்தாஸ் (புக்கிட்ஜாலில் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்)
  2. தனலட்சுமி குப்புசாமி (கத்தித் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேராக்)
  3. வாணிஸ்ரீ காசி (தாமான் காலிடி தமிழ்ப்பள்ளி, ஜோகூர்)

இடைநிலைப் பள்ளி ஆசிரியர் திலகம் விருது:

  1. வாசுகி ரெங்கன் (செர்டாங் பாரு இடைநிலைப்பள்ளி, செர்டாங்)
  2. பாலக்கிருஷ்ணன் நடராஜன் (பண்டார் ரிஞ்சி உலுலங்காட் இடைநிலைப்பள்ளி)
  3. ரவிச்சந்திரன் சுப்ரமணியம் (தாமான் யுனிவர்சிட்டி இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு)

இணைப்பாட நடவடிக்கை ஆசிரியர் திலகம் விருது:

  1. ரமேஸ் சபாபதி முனுசாமி (பத்துக்கவான் இடைநிலைப் பள்ளி, பினாங்கு)
  2. அன்பரசன் முருகையன் (தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி, ஜோகூர் பாரு)
  3. சேவியர் காத்தமுத்து அந்தோணி (தம்பின் தமிழ்ப்பள்ளி)

பிரிவு 2:

புத்தாக்க ஆசிரியர் திலகம் விருது:

  1. சேனாதிராஜா இளஞ்சேரன் (பியூட் தோட்டத்தமிழ்ப்பள்ளி)
  2. நந்தகுமார் குணசேகரன் (தும்போங் தோட்டத்தமிழ்ப் பள்ளி)
  3. செல்வா லட்சுமணன் (சப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளி)

பிரிவு 3:

தமிழாசிரியர் திலகம் விருது:

  1. ஜஸ்டின் ஜீவப்பிரகாசம் சந்தனம் (கணேசத் தமிழ்ப்பள்ளி)

வாழ்நாள் சாதனையாளர் விருது:

  1. முருகன் கண்ணன் (ஓய்வு பெற்ற ஆசிரியர், எழுத்தாளர், தாமான் தெலுக் ம.இ.கா கிளைத் தலைவர்)

தலைமைப் பண்பாளர் விருது:

  1. வளர்மதி பாலகிருஷ்ணன் (செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி கூட்டரசு பிரதேசம்)