Home உலகம் ஜப்பானில் பயங்கரம்: 2 மாதங்களில் 9 கொலைகள் செய்த கொடூரன்!

ஜப்பானில் பயங்கரம்: 2 மாதங்களில் 9 கொலைகள் செய்த கொடூரன்!

852
0
SHARE
Ad

Takahiro Shiraishiடோக்கியோ – ஜப்பானில் டுவிட்டர் மூலம் நண்பர்களை ஏற்படுத்தி அவர்களைத் தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வரவழைத்துக் கொடூரமாகக் கொலை செய்த  தாகைரோ ஷிரைசி என்ற 27 வயதுக் கொலைகாரன் பிடிபட்டிருக்கிறான்.

8 இளம் பெண்களையும், 1 ஆணையும் கொலை செய்து உடலைத் துண்டாக்கி தலை, கை, கால்கள் போன்ற பாகங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மற்ற பாகங்களை குப்பையோடு குப்பையாக தூக்கி வீசியிருப்பது விசாரணை தெரியவந்திருக்கிறது.

அவனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து 240 எலும்புத் துண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice