Home கலை உலகம் “1 கோடி வரி கட்டியிருக்கிறேன் தெரியுமா?” – அமலா பால் ஆத்திரம்!

“1 கோடி வரி கட்டியிருக்கிறேன் தெரியுமா?” – அமலா பால் ஆத்திரம்!

816
0
SHARE
Ad

amalapaulசென்னை – அண்மையில் ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை வாங்கிய அமலா பால், அதற்கு போலியான புதுச்சேரி முகவரிக் கொடுத்து, 20 லட்ச ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து தற்போது கேரளா காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது. புதுச்சேரியில் அமலா பால் கொடுத்த முகவரி போலி என்பதால் புதுச்சேரி அரசும் அது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறது.

இந்நிலையில், அதனை மறுத்து அறிக்கை விடுத்திருக்கும் அமலா பால், தன் மீது வீணான பழியைச் சுமத்தி, தனது பத்திரிகை விற்பனை அதிகரிக்க கேரள பத்திரிகை ஒன்று முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

சட்டத்தை மதிக்கும் ஒரு இந்தியப் பிரஜையான தான், நடப்பு ஆண்டில் மட்டும் 1 கோடி ரூபாய் வரி செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.