Home நாடு “இந்தியர்களின் உள்ளங்களை நஜிப் வென்றிருக்கிறார்” – ஜோமோ சுந்தரம்

“இந்தியர்களின் உள்ளங்களை நஜிப் வென்றிருக்கிறார்” – ஜோமோ சுந்தரம்

1261
0
SHARE
Ad

jomo-sundaram-economistகோலாலம்பூர் – அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை இந்தியர்களுக்கு சென்றடையும் வண்ணம் செயல்பட்டிருப்பதன் மூலம் பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்தியர்களின் மனங்களை வென்றிருக்கிறார் என நாட்டின் முன்னணி பொருளாதார மேதைகளில் ஒருவரான ஜோமோ குவாமே சுந்தரம் தெரிவித்திருக்கிறார்.

ஜோமோ சுந்தரம் மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளராவார். பின்னர் ஐக்கிய நாட்டு மன்றத்தின் உதவி தலைமைச் செயலாளர்களில் ஒருவராகப் பொறுப்பு வகித்தார்.

மஇகா மட்டும் என்றில்லாமல் பல்வேறு சிறு அறக்கட்டளைகளின் மூலம் இந்திய சமுதாயத்தின் அடிமட்ட மக்களை நோக்கி வழங்கப்பட்ட தனது நிதி ஒதுக்கீடுகள் இந்தியர்களை சென்றடைந்திருப்பதை நஜிப் உறுதி செய்திருப்பதோடு, அதற்காக இந்தியர்களின் உள்ளங்களை வென்று அவர்களின் உணர்வுபூர்வமான ஆதரவைப் பெற்றிருக்கிறார் என்பதை ஜோமோ சுந்தரம் ஒப்புக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் பொதுமக்களின் உணர்வுகளையும் தனக்கு சாதகமாக நஜிப் தூண்டியிருப்பதால் இந்த அம்சம் தேசிய முன்னணிக்கு சாதகமாக இருக்கும் என ஜோமோ சுந்தரம் கருதுகிறார்.

ஆனால், இது எந்த சதவீத அளவுக்கு தேசிய முன்னணிக்கு ஆதரவாக மாறும் என்பதைக் கணிப்பது தற்போதைக்கு சிரமம் என்றும் ஜோமோ சுந்தரம் கூறியிருக்கிறார்.

ஜோமோ சுந்தரம் பொதுவாக அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராகக் கருதப்படுபவராவார். நேற்று சனிக்கிழமை “14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மலேசியாவின் எதிர்காலம்” என்பது குறித்து கோலாலம்பூர், பங்சாரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஜோமோ உரையாற்றியபோதே மேற்குறிப்பிட்ட கருத்துகளை வெளியிட்டார்.