ரியாட் – ஏமன் நாட்டு அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி வரும் போராளிக் குழுக்கள், ஏமனிலிருந்து ஏவுகணை ஒன்றை நேற்றிரவு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாட்டையும், அதன் விமான நிலையத்தையும் குறிவைத்து, பாய்ச்சியுள்ளனர்.
இருப்பினும் சவுதி இராணுவத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்த ஏவுகணை இடையிலே தடுத்து நிறுத்தப்பட்டு, இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
ஈரான் ஆதரவோடு ஏமனில் போராடி வரும் போராளிக் குழுக்களுக்கு எதிராக பல நாடுகள் ஒன்றிணைந்த எதிர்த் தாக்குதல்களை சவுதி அரேபியா மேற்கொண்டு வருகிறது.
இதற்குப் பதிலடியாக நடத்தப்பட்டிருக்கும் இந்த ஏவுகணைத் தாக்குதலால் மத்திய கிழக்கில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.