Home நாடு வெள்ளம்: எஸ்பிஎம்/எஸ்டிபிஎம் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

வெள்ளம்: எஸ்பிஎம்/எஸ்டிபிஎம் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

1124
0
SHARE
Ad

Kamalanathan-feature-கோலாலம்பூர் – பினாங்கு, கெடா மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வுகள் நடைபெறும் என துணை கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்திருக்கிறார்.

கல்வி அமைச்சு வெள்ள நிலவரங்களைக் கண்காணித்து வருவதாகவும், திட்டமிட்ட தேதிகளில் இந்தத் தேர்வுகளை மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கெடா மாநிலத்தில் 261 மையங்களில் 34,672 மாணவர்களும், பினாங்கு மாநிலத்தில் 159 மையங்களில் 23,114 மாணவர்களும் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இருப்பினும் பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் ஜிட் சின் இடைநிலைப் பள்ளியில் (SMJK Jit Sin, Bukit Mertajam) எஸ்பிஎம் தேர்வு எழுதவிருந்த 400 மாணவர்கள், அருகிலுள்ள ஜிட் சின் இண்டிபெண்டன்ட் பள்ளிக்கு (Jit Sin Independent High School) மாற்றப்படுவர் என்றும் கமலநாதன் அறிவித்தார்.