Home நாடு மஇகா: “வெளியில் இருப்பவர்களை மீண்டும் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது”

மஇகா: “வெளியில் இருப்பவர்களை மீண்டும் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது”

1066
0
SHARE
Ad

subra-dr-kota kinabalu-queen elizabeth hospitalகோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எந்தவித முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்படாத நிலையில் முடிவுற்றது.

மத்திய செயலவைக் கூட்டம் முடிவடைந்ததும் எந்தவித பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெறவில்லை.  மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சுப்பிரமணியம் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உடனடியாக செல்ல வேண்டியிருந்ததால், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

எனினும் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட பல்வேறு விவகாரங்களுக்கு இடையில், கட்சிக்கு வெளியில் இருப்பவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள பரிசீலிக்கப்படுவதாகவும் டாக்டர் சுப்ரா மத்திய செயலவை உறுப்பினர்களிடம் விளக்கினார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

அதே வேளையில், மஇகாவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.ரமணன் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட செய்திருந்த மேல் முறையீடு குறித்தும் எந்தவித விவாதங்களும் நடைபெறவில்லை எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.