ஆர்.கே.நகர் தேர்தல் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் அவர்களை நீக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் ஏறத்தாழ 45,000 போலி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தமிழகத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டுமென்றும், டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இந்த இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.