Home வணிகம்/தொழில் நுட்பம் பாரிசான் எம்பியைக் கடுமையாக விமர்சித்த டோனி!

பாரிசான் எம்பியைக் கடுமையாக விமர்சித்த டோனி!

1256
0
SHARE
Ad

tonyகோலாலம்பூர் – சண்டாக்கானிலிருந்து கோலாலம்பூர் செல்ல, ஒருவழிப் பாதைக்கு 2,000 ரிங்கிட் வசூலித்ததாக ஏர் ஆசியா நிறுவனம் மீது குற்றம் சாட்டியிருக்கும் கினாபாத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் மொஹ்தார் ராடினுக்கு எதிராக ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சபா, சரவாக் மக்களுக்காக ஏர் ஆசியா அத்தனை வசதிகளைச் செய்து கொடுத்தும் கூட, “புகார் கூறுவது நிறுத்தாத” தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தை குறித்து டோனி கண்டித்திருக்கிறார்.

“கடந்த 16 ஆண்டுகளாக சில எம்பி-க்கள் ஏர் ஆசியா மீது புகார் கூறி வருகின்றனர். ஏர் ஆசியாவுக்கு முன்னர், கிழக்கு மற்றும் மேற்கு மலேசியா இடையே மிக சிறிய தொடர்பு தான் இருந்தது. அப்போது கேஎல் – சண்டாக்கானுக்கு விமானப் போக்குவரத்து கூட இல்லை” என்று டோனி தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஏர் ஆசியா அதிக தொகை வசூலிப்பதாக பாங் மொஹ்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரசாங்கம் ஏர் ஆசியாவை விசாரணை செய்யும் என கடந்த செவ்வாய்க்கிழமை துணைப் போக்குவரத்து அமைச்சர் அப்துல் அசிஸ் கப்ராவி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.