ஷான்ஷி – சீனாவின் வடக்குப் பகுதியான ஷான்ஷியில், வழிப்பாட்டுத்தலம் ஒன்றில் திருவிழா நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், அங்கு பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு, சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுமார் 100-க்கணக்கானோர் சுற்றி நின்று சர்க்கஸ் நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கூண்டிற்குள் புலி, கரடி போன்ற மிருகங்களை வைத்து சர்க்கஸ்காரர்கள் நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென கூண்டிலிருந்து புலி ஒன்று தப்பி வெளியே வந்து கூட்டத்தில் இருந்தவர்களைத் தாக்கியது.
இதில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், புலியின் பாதுகாவலர் அங்கு விரைந்து வந்து புலியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார்.
இச்சம்பவம் தற்போது நட்பு ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றது.