Home கலை உலகம் கழிவறையில் அமர்ந்து டப்பிங் செய்த சிம்பு – தயாரிப்பாளர் குமுறல்!

கழிவறையில் அமர்ந்து டப்பிங் செய்த சிம்பு – தயாரிப்பாளர் குமுறல்!

1383
0
SHARE
Ad

simbuசென்னை – மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு, தமன்னா நடித்து அண்மையில் வெளிவந்து படுதோல்வியடைந்த படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, சிம்புவின் பல பொறுப்பற்ற செயல் குறித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்தப் படத்திற்காக 2 கோடி ரூபாய் முன்தொகையாக வாங்கிய சிம்பு, ஒழுங்காகப் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டமானதாகவும் மைக்கேல் ராயப்பன் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், படத்தின் டப்பிங் (குரல் பதிவு) சமயத்தில் அவரது வீட்டிற்கு வரச் சொல்லிய சிம்பு கழிவறையில் அமர்ந்து படத்திற்கான டப்பிங்கை முடித்ததாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

இறுதியில், இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று கூறிய சிம்பு, 35 விழுக்காடு மட்டுமே நிறைவடைந்திருந்த முதல் பாகத்தை கட்டாயப்படுத்தி வெளியிட வைத்து 20 கோடி ரூபாய் நஷ்டத்திற்குள்ளாக்கிவிட்டதாகவும் மைக்கேல் ராயப்பன் புலம்பியிருக்கிறார்.