Home இந்தியா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தினகரன் மீது வழக்கு!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தினகரன் மீது வழக்கு!

941
0
SHARE
Ad

TTV Dhinakaranசென்னை – வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக டிடிவி.தினகரன் சில தினங்களுக்கு முன்னர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த போது நிறைய வாகனங்களுடன் வந்ததாக புகார் கூறியிருக்கும் தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெற்றிவேல் உள்ளிட்ட 20 பேர் மீது தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.