Home நாடு கூட்டரசு நீதிமன்றத்தில் சங்கப் பதிவகம்-மஇகா தரப்புக்கு இறுதி வெற்றி!

கூட்டரசு நீதிமன்றத்தில் சங்கப் பதிவகம்-மஇகா தரப்புக்கு இறுதி வெற்றி!

1750
0
SHARE
Ad

MICபுத்ரா ஜெயா – சங்கப் பதிவகம் மற்றும் மஇகாவுக்கு எதிராக முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் மஇகா பாகான் தொகுதி (பினாங்கு) தலைவர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், முன்னாள் மஇகா சிகாம்புட் தொகுதி தலைவர் டத்தோ ராஜூ ஆகிய மூவரும் தொடுத்திருந்த வழக்கின் மேல்முறையீடு இன்று செவ்வாய்க்கிழமை (5 டிசம்பர் 2017) கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Federal Court – பெடரல் நீதிமன்றம்) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய கூட்டரசு நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் (கோர்ட் ஆப் அப்பீல்) தீர்ப்பை இரத்து செய்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொண்டு மறு உறுதிப்படுத்தியது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஏற்கனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கும் நிலையில் அந்த முடிவை அப்படியே கூட்டரசு நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு சாதகமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

(மேலும் செய்திகள் தொடரும்)