Home நாடு அம்னோ பொதுப்பேரவை: வழக்கத்தை விடக் கூடுதலானோர் பங்கேற்பர்!

அம்னோ பொதுப்பேரவை: வழக்கத்தை விடக் கூடுதலானோர் பங்கேற்பர்!

784
0
SHARE
Ad

tengku-adnan1கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கும் 2017-ம் ஆண்டு அம்னோ பொதுப்பேரவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காரணம், இந்த ஆண்டு பொதுப்பேரவையில், அம்னோ அடிமட்டத் தலைவர்கள் மற்றும் கட்சியை ஆதரிக்கும் அரசு சாரா இயக்கங்களின் வேண்டுகோளின் பேரில் பேராளர்களோடு, கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் இதில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இது குறித்து அம்னோப் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறுகையில், இந்த ஆண்டு சுமார் 5, 739 பேராளர்களோடு, ஆதரவாளர்களும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நாடெங்கிலும் 21,851 கிளைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அக்கிளைகளைச் சேர்ந்த தலைவர்களும், அவர்களின் கீழ் செயல்படும் 3 தொகுதிகளைச் சேர்ந்த தலைவர்களும் பொதுப்பேரவையில் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை ஒரு மாறுதலுக்காகவும், கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமை வலுப்பெறவேண்டும் என்ற நோக்கத்திலும் இதனைச் செய்திருக்கிறோம்” என்று தெங்கு அட்னான் தெரிவித்தார்.

புத்ரா உலக வர்த்தக மையத்தில் இன்று அம்னோ பொதுப்பேரவை அதிகாரப்பூர்வமாகத் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.