Home கலை உலகம் சேரன் மீது நடவடிக்கை எடுப்பேன் – விஷால் எச்சரிக்கை!

சேரன் மீது நடவடிக்கை எடுப்பேன் – விஷால் எச்சரிக்கை!

1044
0
SHARE
Ad

vishal-story_647_051416111218சென்னை – தான் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராகப் போர்கொடி தூக்கியிருக்கும் இயக்குநர் சேரனுக்கு, நடிகர் விஷால் இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதில் விஷால் கூறியிருப்பதாவது:-

“இயக்குநர் சேரன் மீது நான் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீப காலமாக அவர் செய்யும் சில தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தை தான் ஏற்படுத்துகின்றன.”

#TamilSchoolmychoice

“ஒரு சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று எந்த ஒரு சட்டவிதியும் இல்லை. சட்ட ஆலோசகர்களிடம் கலந்தாலோசித்த பின்னரே நான் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தேன். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதைவிடுத்து, கீழ்தரமான விமர்சனங்களை முன் வைத்து மிரட்டிக் காரியம் சாதிக்க நினைக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்க மாட்டேன். சேரன் இதனைத் தொடர்ந்து செய்தால் சங்க விதிகளின் படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என விஷால் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.