Home இந்தியா விஷால் வேட்புமனு நிராகரிப்பு – ஆட்சேபத்துக்குப் பிறகு ஏற்கப்பட்டது!

விஷால் வேட்புமனு நிராகரிப்பு – ஆட்சேபத்துக்குப் பிறகு ஏற்கப்பட்டது!

903
0
SHARE
Ad

vishalசென்னை – (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நிலவரம்)

இன்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாக கையெழுத்திட்டவர்களை அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பினர் மிரட்டினர் என்றும் அவர்கள் கையெழுத்திட்ட வேட்புமனுவை மீட்டுக்கொள்ள நெருக்குதல் தந்தனர் எனவும் விஷால் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். அவர் பேசிய குரல் ஒலிப்பதிவுகளும் பரவலாக சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அவருடைய ஆட்சேபங்களை ஏற்று மீண்டும் அவருடைய வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

நாளை புதன்கிழமை முதல் வாக்காளர்களைச் சந்திக்கப் போவதாக விஷால் அறிவித்திருக்கிறார்.