Home கலை உலகம் மகளைக் கிண்டலடித்த பெண்ணுக்கு அபிஷேக் பதிலடி!

மகளைக் கிண்டலடித்த பெண்ணுக்கு அபிஷேக் பதிலடி!

1228
0
SHARE
Ad

Former Miss World Aishwarya Rai (C) speaks on stage with husband Abhishek Bachchan and daughter Aaradhya Bachchan (L) during the grand final of the Miss World 2014 pageant at the Excel London ICC Auditorium in London, Britain, 14 December 2014. EPA/FACUNDO ARRIZABALAGAபுதுடெல்லி – டுவிட்டரில் தனது மகளைக் கிண்டலடித்த பெண்ணுக்குத் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகர் அபிஷேக் பச்சன்.

அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதியின் ஒரே மகளான ஆராத்யாவுக்குத் தற்போது 6 வயதாகிறது.

ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் ஆராத்யாவைக் காண முடியும்.

#TamilSchoolmychoice

எப்போதும் ஐஸ்வர்யாவின் தோளில் சாய்ந்த படி ஆராத்யா இருப்பார்.

இந்நிலையில், டுவிட்டரில் பெண் ஒருவர், “அபிஷேக் பச்சன், உங்கள் மகள் ஆராத்யா பள்ளிக்குப் போகிறாளா? இல்லையா? அன்னை போகும் சுற்றுப்பயணத்திற்கெல்லாம் உடன் செல்ல உங்கள் மகளுக்கு எந்தப் பள்ளி அனுமதி கொடுக்கிறது? அல்லது அழகின் பின்னால் சென்று உங்கள் மூளையை இழக்கிறீர்களா? திமிர் பிடித்த அன்னையின் தோளில் சாய்ந்தபடி எப்போதும் அவர் ஒரு இயல்பான பெண்ணாகவே வளரவில்லை” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்திருக்கும் அபிஷேக், “மேடம் எனக்குத் தெரிந்தவரை வார இறுதியில் எந்தப் பள்ளியும் செயல்படுவதில்லை. ஆராத்யா வார நாட்களில் பள்ளிக்குச் செல்கிறாள். நீங்கள் உங்கள் பதிவிலுள்ள எழுத்துப் பிழையைக் கவனியுங்கள்” என்று அபிஷேக் பதிலடி கொடுத்திருக்கிறார்.