Home உலகம் பிரிட்டன் பிரதமரைக் கொல்ல முயற்சி!

பிரிட்டன் பிரதமரைக் கொல்ல முயற்சி!

807
0
SHARE
Ad

Theresa-May-British-PMலண்டன் – பிரிட்டன் பிரதமர் தெரசா மேவைக் கொலை செய்யத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சரியான நேரத்தில் அவர்களில் இருவரைக் கைது செய்ததன் மூலம் இந்தக் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது என்றும் லண்டன் காவல்துறைத் தெரிவித்திருக்கிறது.

லண்டனில் உள்ள தெரசாவின் இல்லத்தில் அவரது வாகனம் நுழையும் முன், வெடிகுண்டை வீசிக் கொலை செய்ய ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த நவம்பர் 28-ம் தேதி, லண்டனின் வடக்கு பகுதியில் ஜகாரியா ரஹ்மான்(வயது 20), அகிப் இம்ரான்(வயது 21) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தச் சதித்திட்டம் குறித்து காவல்துறைக்குத் தெரிய வந்திருக்கிறது.