கோலாலம்பூர் – மொழி, இலக்கியம் குறித்துச் சிந்திக்கவும், அது குறித்து மாதந்தோறும் உரையாடவும் ‘இலக்கியக் களம்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் முதல் சந்திப்பான ‘இலக்கியக் களம்- சந்திப்பு 1’ வரும் டிசம்பர் 10-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையில், காஜாங் செமினி சாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தில் நடைபெறவிருக்கிறது.
குறிப்பாக, இந்தச் சந்திப்பு இளையோருக்கு மிகவும் பயனளிக்கவிருப்பதோடு, வாசிக்கும் ஆர்வத்தை தூண்டி, படைப்பிலக்கியம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த முதல் சந்திப்பில், வரும் டிசம்பர் 16-ம் தேதி, தமிழகத்தில் ‘விஷ்ணுபுரம்’ விருது பெறவிருக்கும் மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியின் சிறுகதை, நாவல் குறித்த அறிமுகம் இடம்பெறவிருக்கிறது.
மேலும், மலேசிய எழுத்தாளர் சுதந்திரனின் படைப்பு அனுபவம், கவிதை குறித்த உரையாடல், அண்மைய மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த பார்வையும் இடம்பெறவிருக்கிறது.
15 வயதுக்கு மேற்பட்ட இளையோரும், தமிழ் ஆர்வமுள்ளோரும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளலாம். கட்டணம் எதுவும் இல்லை.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, நிகழ்ச்சியில் இடம்பெறும் அங்கங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய கையேடு வழங்கப்படும்.
கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் முன்பதிவு செய்வது அவசியம்.
தொடர்புக்கு:
ந.பச்சைபாலன் – 012 6025450
சுதந்திரன் – 012 7167071