சென்னை – வரும் டிசம்பர் 21-ம் தேதி, நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், போட்டியிடுவதற்காக கடந்த திங்கட்கிழமை நடிகர் விஷால் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று தேர்தல் அதிகாரிகள் அவரது வேட்புமனுவை ஆராய்ந்துவிட்டு, விஷாலுக்கு ஆதரவாக முன்மொழிந்த 10 பேரில் இருவர் பின்வாங்கிவிட்டதாகக் கூறி விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தனர்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை முதல் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து குமுறல்களை வெளிப்படுத்தி வரும் விஷால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்தார். 2017 டிசம்பர் 5-ம் தேதி ஜனநாயகமும் இறந்துவிட்டது என்று தெரிவித்தார்.
இதனிடையே,இந்த விவகாரத்தை டுவிட்டர் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல விஷால் முயற்சி செய்து வருகின்றார்.
தனக்கு நடந்தது அநியாயம் என்றும், தனது நீதி வேண்டும் என்றும் விஷால் அதில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.