Home Video ‘ஜூராசிக் வோர்ல்ட்’ – புதிய முன்னோட்டம் – 10 மில்லியன் பார்வையாளர்கள்

‘ஜூராசிக் வோர்ல்ட்’ – புதிய முன்னோட்டம் – 10 மில்லியன் பார்வையாளர்கள்

1033
0
SHARE
Ad

jurassic_world - fallen kingdomஹாலிவுட் – ஹாலிவுட் சினிமாவைப் புதிய பாதைக்குக் கொண்டு சென்ற இயக்குநர்களின் குறிப்பிடத்தக்கவர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இயக்கத்தில் வெளிவந்த ஜூராசிக் பார்க் மாபெரும் வசூல் படமாகத் திகழ்ந்ததோடு, அழிந்து போன டைனோசர் மிருகங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டி, மறக்க முடியாத சினிமா அனுபவத்தை நமக்குத் தந்தது.

அதைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் ‘ஜூராசிக் வோர்ல்ட்’ என்ற பெயரில் வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியையும், இரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும்.

#TamilSchoolmychoice

தற்போது ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கின் தயாரிப்பு நிர்வாகத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் மூன்றாவது பாகம், ‘ஜூராசிக் வோர்ல்ட் – பால்லன் கிங்டம்’ என்ற பெயரில் அடுத்த ஆண்டு (2018) ஜூன் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியீடு கண்டது.

வெளியீடு கண்ட 2 நாட்களிலேயே 10 மில்லியன் பார்வையாளர்களை இந்த முன்னோட்டம் ஈர்த்துள்ளது. அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: