கோலாலம்பூர் – தமிழகத்தில் உள்ள இராமநாதபுரத்தில் மாமியார் கொடுமையில் சிக்கித் தவித்து வந்த மலேசியப் பெண் தேவசூரியா, நேற்று வெள்ளிக்கிழமை தனது 4 வயது மகனுடன் மலேசியாவுக்குத் திரும்பினார்.
“வீடு திரும்பியது நல்லது. நான் இப்போது மகிழ்ச்சியாகவும், பிரச்சினையிலிருந்து விடுபட்டும் இருக்கிறேன்” என்று திருச்சியிலிருந்து கோலாலம்பூர் திரும்பிய தேவசூரிய விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேவசூரியாவை வரவேற்க மக்கள் நலன் பிரிவின் ஆலோசகர் மற்றும் உளவியல் பிரிவின் இயக்குநர் வான் ஜாரினா வான் சாலே, மூத்த துணை இயக்குநர் ஆர்.கந்தேஸ்வரி, ஆலோசகர்கள் சபராம் நாயுடு, எஸ்.ரமேஷ் மற்றும் நோர்ம்ஷாடியா ஜாமியான் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அதிகாரி அஜானிஸ் பால் ஆகியோர் விமான நிலையம் வந்திருந்தனர்.
தற்போது தேவசூரியா ரவாங்கிலுள்ள இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பொருளாதார வசதிகளை சில அமைப்புகள் முன்வந்து செய்து கொடுத்திருக்கின்றன.
அதேவேளையில், அவரது மகனின் படிப்புச் செலவிற்கும் சில ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.