Home நாடு 1 மில்லியன் ரிங்கிட்டுடன் பிடிபட்ட போலீஸ் அதிகாரி யார்?

1 மில்லியன் ரிங்கிட்டுடன் பிடிபட்ட போலீஸ் அதிகாரி யார்?

859
0
SHARE
Ad

malaysian police-logoஈப்போ – கடந்த வியாழக்கிழமை (7 டிசம்பர் 2017) இங்குள்ள காவல் துறையின் உயர் அதிகாரியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள், அங்கு 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.

ஏசிபி எனப்படும் (Assistant Commissioner of Police) துணை காவல் துறை ஆணையர் பதவி வகிக்கும் அந்த அதிகாரியின் வீட்டில் வகை வகையான நகைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஊழல் மற்றும் அதிகார மீறல்கள் தொடர்பில் அந்த அதிகாரி மீது எழுந்த புகார்கள் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அந்த அதிகாரியின் இல்லத்தில் சோதனைகள் நடத்தினர்.

#TamilSchoolmychoice

59 வயதான அந்த அதிகாரி பின்னர் பேராக் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவருடன் 54 வயதான அவரது மனைவியும், 34 வயதுடைய பெண் வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண் வர்த்தகர் அந்தக் காவல் துறை அதிகாரிக்கு இடைத் தரகராகச் செயல்பட்டார் என நம்பப்படுகிறது.

இந்த மூவரையும் விசாரிப்பதற்கு 5 நாட்கள் தடுப்புக் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பேராக் மாநில காவல் துறை தலைமையகத்தில் பணிபுரியும் இந்த காவல் துறை அதிகாரி யார் என்ற விவரம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை!