Home நாடு “கேமரன் மலை: பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்” கேவியஸ்

“கேமரன் மலை: பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்” கேவியஸ்

705
0
SHARE
Ad

kayveasகேமரன் மலை – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மைபிபிபி கட்சி சார்பாக, அடுத்த பொதுத் தேர்தலில் தான் போட்டியிட ஒதுக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் டான்ஸ்ரீ கேவியஸ், இறுதி முடிவை பிரதமரிடமே விட்டுவிடுவதாகக் கூறியுள்ளார்.

தேசிய முன்னணிக்கு வெற்றியைக் கொண்டுவரக் கூடிய கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கானப் பொருத்தமான வேட்பாளர் யார் என்பதை பிரதமர் நிர்ணயம் செய்வார் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கேவியஸ் தெரிவித்துள்ளார்.

“டாக்டர் சுப்ராவைச் சந்தித்தேன்”

“இந்த விவகாரம் தொடர்பில் நான் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியத்தையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இருப்பினும் கேமரன் தொகுதியை மைபிபிபி கட்சிக்குக் கொடுக்க வேண்டும் என அவருக்கு நெருக்குதல் கொடுப்பதில் நியாயமில்லை என்றும் நான் கருதுகிறேன்” என்றும் கேவியஸ் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

எனினும் கேமரன் மலை தொகுதிக்குத் தொடர்ந்து வருகை தந்து கேவியஸ் அங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கேமரன் மலை பூர்வ குடியினரின் குடியிருப்பு ஒன்றில் மைபிபிபி கட்சியின் புத்திரி பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பெர்னாமாவிடம் மேற்கண்ட தகவலை கேவியஸ் தெரிவித்தார்.

“எனவே, பிரதமர் இந்த விவகாரத்தில் கூடிய விரைவில் தனது முடிவை அறிவிக்க வேண்டும். தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கிடையில் நட்புறவு தொடர்ந்து பேணப்படுவதும், வலிமையான ஒற்றுமை நிலவுவதும்தான் இப்போதைக்கு மிகவும் முக்கியம்” எனவும் கேவியஸ் கூறியிருக்கிறார்.

அதே வேளையில் கேமரன் மலையில் மைபிபிபி கட்சி வேட்பாளர் போட்டியிட பிரதமர் முடிவெடுத்தால், அந்தத் தொகுதியில் வழக்கமாகப் போட்டியிட்டு வந்திருக்கும், மஇகா அந்த முடிவையும் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் கேவியஸ் கேட்டுக் கொண்டார்.