Home நாடு ஜமாலுக்கு 2 நாள் தடுப்புக் காவல்!

ஜமாலுக்கு 2 நாள் தடுப்புக் காவல்!

674
0
SHARE
Ad

Jamal Md Yunosகோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுசுக்கு மேலும் இரண்டு நாள் தடுப்புக் காவலை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக டாங் வாங்கி காவல் நிலையத்தின் தலைவர் (ஓசிபிடி) துணை ஆணையர் ஷஹாருடின் அப்துல்லா கூறியதாக ஸ்டார் இணைய செய்தித் தளம் இன்று தெரிவித்தது.

ஜமால் மீதிலான வழக்கை மலேசியக் குற்றவியல் சட்டம் பிரிவு 504 மற்றும் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரித்து வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

குற்றவியல் சட்டம் 504-இன்படி அமைதியைக் குலைக்கும் வண்ணம் ஒருவருக்கு எதிராக அவமதிக்கும் வண்ணம் பேசுவதைக் குற்றமாக்குகிறது. பிரிவு 14-இன்படி ஒருவரின் குணாதிசயத்தை அவமதித்துப் பேசுவது குற்றமாகும்.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை இரவு அம்னோ பொதுப் பேரவைக்குப் பின்னர் மாலையில் கைது செய்யப்பட்ட ஜமால் இரவு 9.25 மணி வாக்கில் கோலாலம்பூர் டாங் வாங்கி காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.

கையில் ஒரு சுத்தியலுடன் அண்மையில் பேட்டி கொடுத்த ஜமால், சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக சைட் இப்ராகிம் விடுத்த கருத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், தானே சைட் இப்ராகிமின் தலையை சுத்தியலால் அடித்து நொறுக்கப் போவதாக ஜமால் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சைட் இப்ராகிமின் கொடும்பாவியையும் ஜமால் ஏற்கனவே கொளுத்தியிருக்கின்றார்.