Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியா ஏர்லைன்சின் இரட்டைச் சலுகை ஆரம்பம்!

மலேசியா ஏர்லைன்சின் இரட்டைச் சலுகை ஆரம்பம்!

1180
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் இன்று திங்கட்கிழமை, அடுத்த 4 நாட்களுக்குத் தனது இரட்டை சலுகையை அறிவித்திருக்கிறது.

அதன் படி, நாளை செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, சிக்கன வகுப்புகளில் முன்பதிவு செய்யும் பயணிகள் 30 விழுக்காடு வரை சலுகையை விலையைப் பெறலாம்.

#TamilSchoolmychoice

இச்சலுகை குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த மேல் விவரங்களை www.malaysiaairlines.com என்ற இணையதளத்தின் வழியாகவும், MHmobile app என்ற செயலி மூலமாகவும் பெறலாம்.

இந்த நான்கு நாட்களில் முன்பதிவு செய்யும் பயணிகளின் பயணக்காலம், டிசம்பர் 19, 2017 முதல் ஆகஸ்ட் 31, 2018 வரை இருக்கும் என்றும் மலேசியா ஏர்லைன்ஸ் அறிவித்திருக்கிறது.