குஜராத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களில் சுமார் 120 சட்டமன்றத் தொகுதிகள் வரை பாஜக வெல்லும் என்பதுதான் அனைத்து இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளின் முடிவுகளாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி சுமார் 75 தொகுதிகள் வரை வெல்லக் கூடும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் மற்றொரு மாநிலமான இமாசலப் பிரதேசத்திலும் பாஜக வென்று ஆட்சி அமைக்கும் என்றும் இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக மீண்டும் வென்றால், அது நரேந்திர மோடி-அமித் ஷா இணைந்த பாஜகவின் தலைமைத்துவத்திற்கு கிடைத்திருக்கும் மற்றொரு மகுடமாகப் பார்க்கப்படும்.