இஸ்தான்புல் – ஜெருசேலம் விவகாரம் குறித்து ஜோர்டான் நாட்டு அரசர் கிங் அப்துல்லாவுடன் (இரண்டு) மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்தாலோசித்தார்.
நேற்று புதன்கிழமை இஸ்லாமியக் கூட்டுறவு ஒருங்கிணைப்பு அமைப்பின் மாநாட்டில் இச்சந்திப்பு நடைபெற்றதாக மலேசியாவின் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா செய்தி வெளியிட்டிருக்கிறது.
25 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில் கிங் அப்துல்லா ஜெருசேலம் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தியதாக நஜிப் தெரிவித்தார்.
ஜெருசேலம் விவகாரம் குறித்துக் கலந்தாலோசிக்கும் இஸ்லாமியக் கூட்டுறவு ஒருங்கிணைப்பு அமைப்பின் அவசர மாநாட்டில் கலந்து கொள்ள நஜிப் தனது துணைவியார் டத்தின் ரோஸ்மா மான்சோருடன் இரண்டு நாட்களுக்கு இஸ்தான்புல் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.