ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டிய திமுக, அவ்வாறு வாக்களிக்கப் பணம் கொடுக்கும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், வாக்குப்பதிவுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.
அவ்வழக்கு விசாரணை இன்று நடைபெற்றதில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுகளை நேரலையில் ஒளிபரப்பும் தகவலைத் தெரிவித்திருக்கிறது.
Comments