Home நாடு செரண்டா தமிழ்ப்பள்ளி தாமதம்: அறங்காவலர் குழுவின் எதிர்ப்பு தான் காரணம்!

செரண்டா தமிழ்ப்பள்ளி தாமதம்: அறங்காவலர் குழுவின் எதிர்ப்பு தான் காரணம்!

692
0
SHARE
Ad

Kamalanathanபிஸ்தாரி ஜெயா – செரண்டாவிலுள்ள மிஞ்சாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றும் விவகாரத்தில் அரசாங்கம் வெற்று வாக்குறுதி வழங்கியதாகக் கூறப்படுவதை கல்வி அமைச்சு முற்றாக மறுத்தது.

சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள நிலப்பிரச்சினையே, செரண்டாவில் கட்டுமானப் பணியை தொடங்குவதற்குத் தடையாக இருப்பதாக கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கடந்த வாரம் மேலவையில் தெரிவித்தார்.

பள்ளி மேலாளர் வாரியமும் பள்ளி கட்டுமானத்தின் நிர்வாக ஆலோசகர் நிறுவனமானமும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமாக தீர்வுக் காண வேண்டும் என்றார் அவர்.

#TamilSchoolmychoice

முன்னதாக,  செரண்டாவில் தமிழ்ப்பள்ளியை கட்டுவதாகச் சொல்லி ஏன் வெற்று வாக்குறுதியை வழங்கினீர்கள் என்று செனட்டர் சந்திரமோகன் (ஜசெக) மேலவையில் கேள்வி எழுப்பியிருந்தார். அக்கூற்றை மறுத்த டத்தோ கமலநாதன் மிகத் தெளிவாகப் பதிலளித்தார்.

புதிய பள்ளியை கட்டுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அறங்காவளர் குழு, ஒரு வழக்கறிஞர் வாயிலாக உலுசிலாங்கூர் மாவட்ட மன்றத்திற்கு எதிர்ப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பின்னர் அந்தக் கடிதம் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது.  இந்த எதிர்ப்புக் கடிதத்தால் கட்டுமானப் பணியை திட்டமிட்டப்படி தொடங்குவதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி அறங்காவலர் குழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்தாண்டு மாணவர்கள் புதிய பள்ளியில் தங்களின் கற்றல் கற்பித்தலை மேற்கொண்டிருக்கலாம் என கோடிகாட்டிய டத்தோ கமலநாதன்,  அந்த இரு கடிதங்களையும் மேலவையில் ஆதாரமாகக் காண்பித்தார்.

கட்டுமானப் பிரச்சினைக்கு பள்ளியின் மேலாளர் வாரியமும் ஒரு காரணம் என்பதை செனட்டர் சந்திரமோகன் பின்னர் மேலவையில் ஒப்புக்கொண்டார்.

புதிய பள்ளியை கட்டுவதற்காக அரசாங்கம் 64 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ள வேளை, ‘UMW Corporation’ நிறுவனம் 2 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

தேசிய முன்னணியின் வாக்குறுதி பொய்க்கவில்லை. அரசாங்கத்தின் முழுச் செலவோடு அதிநவீன வசதிகள் கொண்ட பள்ளியை நிர்மாணிக்க தயாராக இருக்கின்றோம். ஆனால், ஒரு சிலர் அப்பள்ளி அங்கு எழுவதற்கு பெரும் தடையாக இருகின்றனர்.

தமிழ்ப்பள்ளியின் எதிர்காலம் கருதி, அனைத்து தரப்பினரும் ஒரு சேர ஒத்துழைப்பு நல்கினால், கூடிய விரைவில் செரண்டாவில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்படும் என்று டத்தோ கமலநாதன் உறுதி கூறினார்.