Home நாடு ஜோகூர் கொலை: சந்தேக நபர்களை அடையாளம் கண்டது போலீஸ்!

ஜோகூர் கொலை: சந்தேக நபர்களை அடையாளம் கண்டது போலீஸ்!

870
0
SHARE
Ad

JB murderஜோகூர் பாரு – கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜோகூர் பாரு தாமான் பிளாங்கியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில், 30 வயது ஆடவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தியும், காரை ஏற்றியும் கொல்லப்பட்டார்.

பிரேதப் பரிசோதனையில் இதயத்தில் கத்தி துளைத்ததால் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதனிடையே, இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 4 பேரை தற்போது ஜோகூர் காவல்துறை அடையாளம் கண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தற்போது அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியிருக்கிறது.