Home இந்தியா பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்!

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்!

675
0
SHARE
Ad

RKNagarbyelectionசென்னை – ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியோடு நிறைவடைந்தது.

இந்நிலையில், நாளை வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் கொண்ட ஆர்.கே.நகரில், மொத்தம் 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகளில் நாளை மக்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் என மொத்தம் 59 பேர் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.