எதிர்கால தமிழக அரசியல் நீரோட்டத்தை எடுத்துக் காட்டப்போகும் கண்ணாடியாக ஆர்.கே.நகர் விளங்கப் போகிறது என்ற நம்பிக்கைதான் இத்தனை பரபரப்புக்கும் காரணம்!
அந்த அளவுக்கு தமிழகத்தைத் தாண்டி அகில இந்திய அளவிலும், ஏன் உலக அளவிலும் கூட ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகின்றன.
இந்திய நேரப்படி காலை 8.00 மணிக்கு (மலேசிய நேரம் காலை 10.30 மணி) வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
பிற்பகலுக்குள் முழுமையான முடிவுகள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுகள் செல்லியலில் உடனுக்குடன் வெளியிடப்படும். ஏற்கனவே, செல்லியல் குறுஞ்செயலியைப் பதிவிறக்கம் செய்தவர்களுக்கு குறுஞ்செய்திகள் வாயிலாக தேர்தல் நிலவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.