Home இந்தியா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: முதல்சுற்றில் தினகரன் முன்னிலை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: முதல்சுற்றில் தினகரன் முன்னிலை!

876
0
SHARE
Ad

RKNagarbyelectionசென்னை – கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் (மலேசிய நேரம் காலை 10.30 மணி) தொடங்கியது.

1.சென்னை ராணி மேரிக் கல்லூரியில் இவ்வாக்குகள் எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடைபெறுகின்றது.

2. ஆர்.கே.நகர் தொகுதிக்கான 4 தபால் வாக்குகளில் ஒரே ஒரு தபால் வாக்கு மட்டுமே தேர்தலில் பதிவாகியிருந்தது. அவ்வாக்கு திமுக வேட்பாளர் மருத கணேஷுக்கு கிடைத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

முதல் சுற்று நிலவரம் (இந்திய நேரம் காலை 8.30 மணி)

தினகரன் (சுயேட்சை) – 412

மதுசூதனன் (அதிமுக) – 257

மருதுகணேஷ் (திமுக) – 92

கரு.நாகராஜன் (பாஜக_ – 6

எனினும், இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவரவில்லை.