இமாசல மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

    945
    0
    SHARE
    Ad
    Jairam Thakur - Himachala CM
    ஜெய்ராம் தாக்கூர் – இமாச்சலப் பிரதேச முதல்வர்

    புதுடில்லி – அண்மையில் நடந்த முடிந்த குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசம் மாநிலத் தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து குஜராத் மாநில முதல்வராக விஜய் ரூபானி நியமிக்கப்பட்டார்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

    இவர், அம்மாநிலத்தின் சீரஜ் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வென்றவர்.இமாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 44 இடங்களில் பாஜ வெற்றி பெற்றது.

    #TamilSchoolmychoice

    ஆனால், பாஜ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமல், சூஜன்பூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதனால், புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்பட்டது.